×

மயான வசதி வேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

 

ராமநாதபுரம், ஜூலை 26: திருப்புல்லாணி அருகே வேளானூர் கிராமத்திற்கு தனி மயானம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் திருப்புல்லாணி அருகே வேளானூர் காலனியை சேர்ந்த கிராமமக்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது. வேளானூர் காலனியில் 20 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கூலி தொழில் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணிகள் செய்து வருகிறோம்.

இறக்கும் நபர்களின் உடலை அருகிலுள்ள மாணிக்கனேரி பகுதியிலுள்ள உள்ள தனியார் இடத்தில் அடக்கம் செய்து வந்தோம். தற்போது அந்த இடத்தை சிலர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய மாற்று இடம் இல்லை. மேலும் விவசாய நிலப்பகுதியில் மயானம் அமைந்துள்ளதால் மழை மற்றும் விவசாய காலத்தில் உடல்களை கொண்டுச் செல்ல முடியவில்லை. எனவே மயானத்திற்கான இடம் மற்றும் சாலை வசதியை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மயான வசதி வேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Velanur ,Tirupullani ,Dinakaran ,
× RELATED ரூ.1 கோடி தங்க நகைகள் மாயம் எதிரொலி...