×

சாகித்ய அகாடமி வெளியீடான இந்திய இலக்கிய சிற்பிகள்-கலைஞர் மு.கருணாநிதி நூல்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ராசேந்திரன் வழங்கினார்

சென்னை: தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன், கலைஞரை பற்றி தான் எழுதி, சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள “இந்திய இலக்கிய சிற்பிகள் – கலைஞர் மு.கருணாநிதி” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். தமிழை நவீனமாக்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கலைஞர். சமகால சிந்தனைகளோடு பொருத்தி தமிழை அகப்புற நவீனம் ஆக்கியவர். மரபை விதையாக்கி, வெளியுலக சிந்தனையை எருவாக்கி கொண்டு தமிழ் இலக்கண இலக்கியங்களை பொதுமக்களிடம் கொண்டு சென்றவர். கலைஞரின் கலை இலக்கிய பங்களிப்பு அவரது அரசியல் மற்றும் அவரது வரலாறு ஆகியவற்றின் பின்னணியில் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரனால் தொகுக்கப்பட்ட “இந்திய இலக்கியச் சிற்பிகள் – கலைஞர் மு.கருணாநிதி” என்ற நூலினை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன் சந்தித்து, முத்தமிழறிஞர் கலைஞரை பற்றி தான் எழுதி, சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள “இந்திய இலக்கிய சிற்பிகள் – கலைஞர் மு.கருணாநிதி” நூலினை வழங்கினார். அப்போது, சென்னை சாகித்ய அகாடமி அலுவலர் சந்திரசேகர ராஜ், வெளியீட்டு பிரிவு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.

The post சாகித்ய அகாடமி வெளியீடான இந்திய இலக்கிய சிற்பிகள்-கலைஞர் மு.கருணாநிதி நூல்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ராசேந்திரன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Rasendran ,Sahitya Akademi ,M. Karunanidhi ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil University ,Vice ,Chancellor ,Sahitya Academy Publication ,M.K. Stalin ,
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது