×

ரயிலுக்கு அடியில் குடிமகள் குறட்டை

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வட மாநிலத்தை சேர்ந்த பலரும் முதல் பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்தனர். திடீரென இளம்பெண் ஒருவர் முதல் பிளாட்பாரத்தில் நின்றருந்த ரயிலுக்கு அடியில் சென்று தண்டவாளத்தில் படுத்தார். இதை பார்த்த மற்ற பயணிகள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அந்த இளம்பெண்ணை மீட்டனர். அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வட மாநிலத்தை சேர்ந்த அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post ரயிலுக்கு அடியில் குடிமகள் குறட்டை appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Nagarkovil ,Dinakaran ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன