×

காரணை ஊராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு

மாமல்லபுரம்: காரணை ஊராட்சி மன்ற அலுவல புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. மாமல்லபுரம் அடுத்த காரணை ஊராட்சியில் தேசிய கிராம சுயாட்சி திட்டம் மூலம் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட ரூ.24.54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், காரணை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார், துணை தலைவர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் கலந்து கொண்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலாளர் திருஞானமூர்த்தி நன்றி கூறினார்.

The post காரணை ஊராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Karana Panchayat ,Mamallapuram ,Karanai Panchayat Council ,Karanai Panchayat National ,Karanai Panchayat ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...