×

குடவோலை முறை கல்வெட்டு கோயிலில் கலெக்டர் ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் பிரசித்தி பெற்ற குடவோலை முறை கல்வெட்டு கோயில் என்று அழைக்கப்படும் வைகுண்ட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சி காலத்தில் கி.பி.920ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட குடேவாலை தேர்தல் முறைக்குறித்து கல்வெட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய வரலாற்றில் ஒரு சிறந்த ஆவணமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கல்வெட்டு கோயிலுக்கு இன்று (26.7.2023 தேதியன்று) தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பார்வையிட வர உள்ளார். இதனால், நேற்று கவர்னர் பார்வையிட உள்ள கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் மற்றும் டி.எஸ்.பி ஜுலியட்சீசர் உட்பட அரசு அலுவலர்கள் கோயிலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post குடவோலை முறை கல்வெட்டு கோயிலில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Uthramerur ,Vaikunda Varadaraja Perumal ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை