×

கையும் களவுமாக சிக்கிய போது லஞ்சப் பணத்தை விழுங்கிய பலே அதிகாரி: வாந்தி எடுக்க வைத்து வெளியே எடுத்த போலீசார்

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் லஞ்சப் பணத்தை கையில் வாங்கும் போது சிக்கிய வருவாய் துறை அதிகாரி ஒருவர், அந்தப் பணத்தை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய்த் துறை அதிகாரி பட்வாரி கஜேந்திர சிங் என்பவர், தனது அலுவலகத்தில் ₹5,000 லஞ்சமாகப் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார். உடனே சுதாரித்து கொண்ட பட்வாரி கஜேந்திர சிங், லஞ்சமாக வாங்கிய ரூ. 5,000 ரொக்கத்தை தனது வாயில் போட்டு மென்று தின்று விழுங்கினார்.

அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், உடனடியாக அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள், பட்வாரி கஜேந்திர சிங்கை வாந்தி எடுக்க வைத்தனர். ஆனால் அவர் வாந்தி எடுக்க மறுத்துவிட்டார். பின்னர் ஒருவழியாக சம்மதித்ததால், அவரை வாந்தியை எடுக்க வைத்தனர். அப்போது அவரது வயிற்றில் இருந்து லஞ்சப் பணம் கிழிந்த நிலையில் வெளியே வந்தது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கையும் களவுமாக சிக்கிய போது லஞ்சப் பணத்தை விழுங்கிய பலே அதிகாரி: வாந்தி எடுக்க வைத்து வெளியே எடுத்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Jabalpur ,Madhra Pradesh ,Bale ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை பறிமுதல்