×

அகமதாபாத்தில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற உலகிலேயே மிக பெரிய சரக்கு விமானம் எரிபொருள் நிரப்ப சென்னையில் தரையிறங்கியது

 

மீனம்பாக்கம்: அகமதாபாத்தில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற உலகிலேயே மிக பெரிய சரக்கு விமானம் எரிபொருள் நிரப்ப நேற்றிரவு சென்னையில் தரையிறங்கியது. தர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் பிரான்ஸ் நாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை சரக்கு விமானத்தில் ஏற்றி செல்வதற்கு வசதியாக, திமிங்கலம் வடிவில், சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் ‘பெலுகா’ என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995ம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்தது.

இதில் ஒரே நேரத்தில் 47,000 கிலோ (47 டன்) எடை கொண்ட சரக்குகளை ஏற்றி செல்லும் திறனுடையது. இந்த ரக பெரிய சரக்கு விமானம், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டது. வழியில் திடீரென எரிபொருள் தீர்ந்து விட்டது. அதனால் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் நேற்றிரவு 9.30 மணியளவில் தரையிறங்கியது. தே விமானம் கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டபோது சென்னையில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பி விட்டு சென்றது. தற்போது ஓராண்டு கழித்து, நேற்றிரவு மீண்டும் “ஏர்பஸ் பெலுகா” விமானம் 2வது முறையாக சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி விட்டு சென்றது.

இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஏர்பஸ் பெலுகா’ சரக்கு விமானம் நேற்றிரவு எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை வந்தது. எரிபொருள் நிரப்பியதும் தாய்லாந்து புறப்பட்டு சென்றது. கடந்தாண்டு இதே ஜூலை மாதம் முதல் முறையாக அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு வந்து எரிபொருள் நிரப்பி விட்டு தாய்லாந்து தலைநகர் பட்டாயாவிற்கு புறப்பட்டது. தற்போது 2வது முறையாக இந்த விமானம் சென்னைக்கு வந்துள்ளது. இத்தகையை விமானம், சென்னைக்கு வந்துள்ளது, நமக்கு பெருமையளிப்பதாக உள்ளது’ என்றனர்.

The post அகமதாபாத்தில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற உலகிலேயே மிக பெரிய சரக்கு விமானம் எரிபொருள் நிரப்ப சென்னையில் தரையிறங்கியது appeared first on Dinakaran.

Tags : Ahmedabad ,Thailand ,Chennai ,Meenambakkam ,
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...