×

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறினாலும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

*கரூர் கலெக்டர் அறிவிப்பு

கரூர் : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தத்தை தொடர்ந்து, கரூர் கலெக்டர் பிரபு சங்கர், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட மொச்சக்கொட்டாம்பாளையம் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமில் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

பின்னர் இந்த நிகழ்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கு இணங்க, தமிழ்நாடு முழுதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்ப்களை பதிவு செய்யும் முகாம் துவங்கப்பட்டுள்ளது. கருர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 390 இடங்களில் முகாம்கள் மூலமாக பொதுமக்களிடம் விண்ணப்பங்களை நேரில் பெற்று பதிவு செய்யும் முகாம்கள் மாவட்ட முழுவதும் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் 583 முகாம்கள் நடைபெறக்கூடிய சூழலில் முதற்கட்டமாக 390 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு முகாமிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிழற்கூடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதி ஆகிய அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணி 20ம்தேதி முதல் 23ம்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 90 சதவீதம் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் வரக்கூடிய ஒவ்வொரு பெண்களும் அவர்களுடைய விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதனை ஒரு தன்னார்வலர்கள் சரிபார்க்கிறார்கள். மேலும், ஒரு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுகின்ற தன்னார்வலர் பயோ மெட்ரிக் முறையில் அந்த விண்ணப்படிவத்தை பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமமும் இன்றி அவர்களை காத்திருக்க செய்யாமல் மிக விரைவாக இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நேற்று 24ம்தேதி துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் வகையில் காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெறும். அவர்கள் அனைவருக்கும் என்றைக்கு வர வேண்டும், எந்த நேரத்தில் வர வேண்டும் என விண்ணப்பங்களும், டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது. வரும் மக்களை சரியான முறையில் வரவேற்று இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யப்படும்.

முதல் நாளில் ஒவ்வொரு முகாமிலும் காலை 30 விண்ணப்பங்களும், மதியம் 30 விண்ணப்பங்கள் இந்த விண்ணப்ப பதிவு இந்த விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் கணினி முலம் தகுதியான நபர்களை தேர்வு செய்யும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். இந்த விண்ணப்பம் பெற்றவுடனே ஒவ்வொருவருக்கும் ஒரு குறுந்தகவல் வரும். அந்த குறுந்தகவல் வந்த பின்னர் கூறிய காலததில் அவர்கள் தகுதி வாய்ந்தவர்களா, இல்லையா என்ற அடிப்படையில் அவர்களுக்கான செய்தி வெளியிடப்படும்.

இந்த முகாம் விண்ணப்ப பதிவு பெறக்கூடிய முகாம். இது விண்ணப்பங்கள் எழுது படிக்க தெரியாதவர்களுக்கு அவர்களுக்காகவே தனியாக தன்னார்வலர்களை நியமித்துள்ளோம். குறித்த தேதியில் ஒதுக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய விண்ணப்பங்களை கடைசி இரண்டு நாட்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, துணை பதிவாளர் அபிராமி, தாசில்தார் குமரேசன், வட்டார வளர்சசி அலுவலர் வினோத் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறினாலும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : KAROOR ,Tamil Nadu ,Chief Minister ,G.K. ,Stalin Darmapuri District ,Government Higher School ,
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...