×

அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற மாற்று செயலிகள் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் : ஐஆர்சிடிசி

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளதால் ரயில் பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர், ரயில் பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை [பயன்படுத்தி முன்பதிவு செய்து வரும் நிலையில், காலை 8 மணி முதல் ஐஆர்சிடிசி இணையதளமும் செயலியும் முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

இதில் தட்கல் டிக்கெட் முறையில் நாளை பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருக்கும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த பிரச்னையை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஈடுபட்டு இருப்பதாகவும் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு, அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுவரை அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற மாற்று செயலிகள் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

The post அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற மாற்று செயலிகள் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் : ஐஆர்சிடிசி appeared first on Dinakaran.

Tags : Amazon ,Mac My Trip ,IRCDC ,Delhi ,Indian Railways ,Dinakaran ,
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...