×

நீலகிரி அருகே வனப்பகுதியில் பின்னங்காலில் காயத்துடன் சுற்றி வரும் ஒற்றை யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பர்லியார் வனப்பகுதியில் பின்னங்காலில் காயத்துடன் ஒற்றை யானை சுற்றி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் வனப்பகுதியிலிருந்து ஏறக்குறைய 5க்கும் மேற்பட்ட யானைகள் பலாப்பழம் உண்பதற்காக பர்லியார் வனப்பகுதிக்கு வந்தது.

இதில் கூட்டத்தில் இருந்து பிரிந்த 8 முதல் 10 வயதிற்குட்பட்ட யானை பர்லியார் வனப்பகுதியில் தனியாக சுற்றித்திருந்துள்ளது. கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்த யானையின் இடது பின்னங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

பலாப்பழத்தை உண்ண வந்த யானை காயம் காரணமாக நடக்க முடியாமல் அப்பகுதியில் உணவகங்களில் இருந்து கொட்டப்படும் இலைகளை சாப்பிட்டு கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் குழு அமைத்து யானை எங்குள்ளது என்பது குறித்தும் காயமடைந்த யானைக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

The post நீலகிரி அருகே வனப்பகுதியில் பின்னங்காலில் காயத்துடன் சுற்றி வரும் ஒற்றை யானை appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Parliar forest ,Nilgiris district ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்