×

பண்ருட்டி அருகே பயங்கரம் முதியவர் அரிவாளால் வெட்டி கொலை

*மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

பண்ருட்டி : பண்ருட்டி அருகே முதியவர் அரிவாளால் வெட்டியும், கட்டையால் அடித்தும் கொலை செய்யப்பட்டார். பண்ருட்டி அருகே எல்.என்.புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (75), அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து படுத்து தூங்கினார். நேற்று ராமு அதிகாலையில் இவரது வீட்டின் அருகே கையில் வெட்டுக்காயங்களுடன், வாயில் ரத்தம் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் பண்ருட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இறந்தவரின் வாய் மற்றும் கைகளில் ரத்தம் கசிந்த நிலையில் 5 ேபர் படுகாயம்: பதற்றம், போலீஸ் குவிப்பு
காணப்பட்டது. கடலூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் சென்ற மோப்ப நாய் திரும்பியது. முதியவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்துள்ளது தெரியவந்தது. எதற்காக கொலை செய்தார்கள், முன்விரோத காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் ராமுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்பரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அரிவாளால் வெட்டியும், உருட்டு கட்டையால் அடித்தும் முதியவரை கொன்று இருக்கலாம் என தெரிகிறது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரைணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவரது மகன் புருசோத்தமன் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். முதியவரை மர்மநபர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பண்ருட்டி அருகே பயங்கரம் முதியவர் அரிவாளால் வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Panruti ,Panrutti ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...