×

மின் இணைப்பு பெயர் மாற்ற இன்று முதல் முகாம்

சிவகங்கை, ஜூலை 25: சிவகங்கை மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற முகாம் தொடங்கப்பட்டுள்ளது.சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற முகாம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட 7 பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது.

பெயர் மாற்ற முகாமிற்கு வரும விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, சமீபத்திய சொத்து வரி ரசீது, பத்திர நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியான ஆவணம்(செட்டில்மென்ட் பத்திரம், பரிசு பத்திரம் அல்லது நீதிமன்ற உத்தரவு) கொண்டு வர வேண்டும். கட்டணம் ரூ.726 செலுத்த வேண்டும். கூடுதல் விபரம் அறிய முகாம் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

The post மின் இணைப்பு பெயர் மாற்ற இன்று முதல் முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Power ,Executive Engineer ,Murugayan ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்