×

கொடும்பாளூர் சத்திர ஊரணி ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் உண்ணாவிரதம்: கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு

 

புதுக்கோட்டை, ஜூலை 25:கொடும்பாளூர் சத்திர ஊரணி ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு அளித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பொதுக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கொடும்பாளூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கொடும்பாளூர் சத்திர ஊரணி பழங்காலத்தில் மக்களுக்கு அதிகளவில் பயன்பட்டு வந்தது. காலப்போக்கில் இது போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பயனற்று ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. எனவே நீர்நிலை புறம்போக்குகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டும். நானும் பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை வைத்து வருகிறேன். இனியும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் நான் என்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சம்பந்தப்பட்ட கார்டுகளை ஒப்படைத்து விடுகிறேன். என்னை கைலாசா நாட்டிற்கு அனுப்பி வையுங்கள். மேலும் வரும் திங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் கலெக்டர் அலுவலகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

The post கொடும்பாளூர் சத்திர ஊரணி ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் உண்ணாவிரதம்: கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு appeared first on Dinakaran.

Tags : Kodumbalur Chatra Pani ,Pudukottai ,
× RELATED வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு...