×

மகளிர் உலக கோப்பை: மொராக்கோவை பந்தாடியது ஜெர்மனி

மெல்போர்ன்: பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் மொராக்கோ அணியுடன் நேற்று மோதிய ஜெர்மனி அரை டஜன் கோல் போட்டு அமர்க்களமாக வென்றது. மெல்போர்னில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் (எச் பிரிவு) ஜெர்மனி-மொராக்கோ அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி 11வது மற்றும் 39வது நிமிடங்களில் அலெக்சாண்டரா பாப் அபாரமாக கோல் அடிக்க, இடைவேளையின்போது 2-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்திய ஜெர்மனி அணிக்கு, 46வது நிமிடத்தில் கிளாரா புயூஹ்ல், 54வது நிமிடத்தில் ஹன்னா ஐடெல் ஹஜ், 79வது நிமிடத்தில் ஜினாப் ரெடவுனி, 90வது நிமிடத்தில் லியா ஸ்செயூல்லர் ஆகியோர் கோல் போட்டு அசத்தினர். மொரோக்கோ வீராங்கனைகள் கடுமையாகப் போராடியும் ஒரு ஆறுதல் கோல் கூட போட முடியவில்லை. ஆட்டநேர இறுதியில் ஜெர்மனி 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

* ஆக்லாந்தில் நடந்த ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
* அடிலெய்டில் நடந்த எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை எளிதாக வீழ்த்தியது. பிரேசில் வீராங்கனை ஏரி போர்ஜெஸ் 19, 39, 70வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். 48வது நிமிடத்தில் பீட்ரிஸ் சானரெட்ரோ ஒரு கோல் போட்டார்.

The post மகளிர் உலக கோப்பை: மொராக்கோவை பந்தாடியது ஜெர்மனி appeared first on Dinakaran.

Tags : Women's World Cup ,Germany ,Morocco ,Melbourne ,FIFA Women's World Cup ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...