×

ஹாக்கி நேஷன்ஸில் இந்திய மகளிர் அணி

 

லுஸானே: ஹாக்கி புரோ லீக் போட்டிகளில் பங்கேற்காத, சிறந்த ரேங்கிங் பெற்றுள்ள அணிகள் பங்கேற்கும் வகையில், கடந்த 2021ல், ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தாண்டு ஜூன் 15 முதல் 21ம் தேதி வரை எப்ஐஎச் ஹாக்கி நேஷன் கோப்பை போட்டிகள் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற உள்ளன.

இதில் இந்திய மகளிர் அணி பங்கேற்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2024-25ல் நடந்த ஹாக்கி புரோ லீக் போட்டிகளில் இந்திய அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பெற்றதால், அதில் தொடர்ந்து ஆட முடியாமல் போனது. அதனால், நேஷன்ஸ் கோப்பை போட்டிகளில் ஆட தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tags : Hockey Nations ,Lausanne ,Hockey Nations Cup ,Hockey Pro League ,FIH Hockey Nations Cup ,
× RELATED பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்...