×

நானும், உம்மன் சாண்டியும்… முதல்வர் பினராயி விஜயன் உருக்கம்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இரங்கல் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். பினராயி விஜயன் பேசியதாவது: நானும், உம்மன் சாண்டியும் 1970ல் சட்டசபைக்கு புது முகங்களாக ஒன்றாக வந்தோம். அப்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் வேறு யாருக்குமே இல்லாத பெருமை உம்மன் சாண்டிக்கு உண்டு. அன்று முதல் 53 ஆண்டுகள் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இது இதுவரை யாருமே செய்ய முடியாத ஒரு சாதனையாகும். தொடர்ச்சியாக உறுப்பினராக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க வில்லை. ஆனால் உம்மன் சாண்டி தொடர்ந்து உறுப்பினராக இருந்து பல்வேறு பொறுப்புகளை சிறப்பாக நிர்வகித்தார். எந்த நேரத்திலும் கட்சிக்காக செயல்படும் ஒரு தலைவராக அவர் இருந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் அவர் மக்களுக்காக பணியாற்றினார். இவ்வாறு அவர் பேசினார்.

The post நானும், உம்மன் சாண்டியும்… முதல்வர் பினராயி விஜயன் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooman Chandy… ,Chief Minister ,Pinarayi Vijayan Urukkam ,Thiruvananthapuram ,Kerala ,Ooman Chandy ,Pinarayi Vijayan ,Ooman Sandhi ,Pinarayi Vijayan Urukum ,Dinakaran ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்...