×

மாமல்லபுரம் கடல் பகுதியில் உலாவும் திமிங்கலங்கள்: மீனவர்கள் அச்சம்

சென்னை: மாமல்லபுரம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடல் பகுதியில் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதி கடலில், கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சாம்பல் நிற திமிங்கலங்கள் உலா வருகின்றன. இந்த வகை திமிங்கலங்கள் வங்க கடலுக்கு புதியது. அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல் பகுதிகளில் குளிர் நீரில் வாழும் இயல்புடைய இந்த திமிங்கலங்கள் இந்தியாவை ஒட்டிய கடல் பகுதிக்கு வந்திருப்பது ஆச்சரியமான விஷயம் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த வகை திமிங்கலங்கள் சாதாரணமாக 20 அடி நீளம் வரை இருக்கும். இது நினைத்தால் பெரிய வகை பைபர் படகையே கவிழ்த்துவிடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல தயங்கி வருகின்றனர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ”இந்த வகை திமிங்கலங்கள் சிறியதாக இருக்கும் போது வலையில் சிக்கிவிடும். ஆனால் இதை யாரும் சாப்பிட மாட்டார்கள். எனவே நாங்கள் மீண்டும் கடலில் விட்டுவிடுவோம். இது இறால்களை விரும்பி சாப்பிடும். இறால்கள் ஆழம் குறைவான கடல் பகுதிகளில் அதிகம் இருக்கும். எனவே தற்போது இந்த திமிங்கலங்கள் கடற்கரையையொட்டியுள்ள பகுதிக்கு வந்திருக்கிறது. இது மனிதர்களை சாப்பிடாது. எனவே உயிர் மீது எங்களுக்கு பயம் கிடையாது. ஆனால் படகுகளை சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதால் கடலுக்கு போக தயக்கமாக இருக்கிறது. இவை, கரைக்கு நெருக்கமாக வரும்போது கரையில் ஒதுங்கி விடவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு ஒதுங்கினால் நிச்சயம் அது இறந்துவிடும்” என்றனர்.

The post மாமல்லபுரம் கடல் பகுதியில் உலாவும் திமிங்கலங்கள்: மீனவர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,CHENNAI ,Chaturangapatnam ,Dinakaran ,
× RELATED மேலக்கோட்டையூரில் புதிய காவல்...