×

காஷ்மீரில் இந்தாண்டு ஜூலை 20 வரை 35 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. அதனால் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாக குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த ஜூன், ஜூலை (20ம் தேதி) வரை தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 21 பேர் கொல்லப்பட்டனர். அதே இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 14 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜனவரியில் நான்கு பேர், பிப்ரவரியில் மூன்று, மார்ச்சில் ஒன்று, ஏப்ரலில் பூஜ்யம், மே மாதத்தில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இம்மாதம் மட்டும் 20ம் தேதி வரை 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியதால், உள்ளூர் தீவிரவாத குழுக்களில் ஆட்சேர்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. மொத்தமாக இந்தாண்டில், ஜனவரி 1 முதல் ஜூலை 20ம் தேதி வரை 35 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 131 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் வெளிநாட்டு தீவிரவாதிகளின் எண்ணிக்கை 36 என்பதிலிருந்து 27 ஆகக் குறைந்துள்ளது’ என்றன.

The post காஷ்மீரில் இந்தாண்டு ஜூலை 20 வரை 35 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,India ,New Delhi ,Jammu ,Dinakaran ,
× RELATED போர் புரிய வேண்டிய அவசியமில்லை...