×

நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியதால் டெல்லி பழைய யமுனை பாலம் மூடல்

புதுடெல்லி: டெல்லி யமுனை பாலத்தின் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியதால் இன்று பழைய யமுனை பாலம் மூடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் பெய்த கனமழையால் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால், மீண்டும் அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பழைய யமுனா பாலத்தில் 206.56 மீட்டர் உயரத்தில் நீர் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் பாலத்தின் பின்பகுதி நீர்மட்டம் உயர்ந்ததால், பழைய யமுனை பாலம் மூடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பாலம் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஹத்னிகுண்ட் தடுப்பணை ஆற்றில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் 206.7 மீட்டர்களைக் கடந்தது. அபாய கட்டத்தை எட்டியதால், நகரின் சில பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

The post நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியதால் டெல்லி பழைய யமுனை பாலம் மூடல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Old Yamunai Bridge ,New Delhi ,Yamunai Bridge ,Old Yamune Bridge ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...