×

உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி கோவில் மீது கட்டப்பட்டுள்ளதா? : தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

வாரணாசி : உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் சிவலிங்கம் உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தொல்லியல்துறை அதிகாரிகள் அறிவியல் பூர்வமான ஆய்வை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இப்பகுதியில் இந்தியத் தொல்லியல்துறை அறிவியல் பூர்வ கள ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் வாரணாசி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஞானவாபி மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக தொல்லியல் துறை ஆய்வு நடத்தி ஆகஸ்ட் 4க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியைத் தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.இதையடுத்து இன்று காலை ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் காவல்துறையினரின் உதவியுடன் தொல்லியல் துறையினர் ஆய்வை நடத்தி வருகின்றனர். தொல்லித்துறை அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.

The post உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி கோவில் மீது கட்டப்பட்டுள்ளதா? : தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ganawabi ,Mosque Temple ,Uttar Pradesh ,Archaeology Department ,Varanasi ,Shivalingam ,Ganawabi Mosque ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...