×

மணிப்பூர் கலவரம் …பாஜக முதல்வரின் செயலற்ற தன்மை குறித்தும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்த மாணவர் போலீஸ் கண்முன் அடித்துக் கொலை!!

இம்பால் : மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் பற்றியும் அம்மாநில பாஜக முதல்வரின் செயலற்ற தன்மை குறித்தும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்த மாணவர் ஒருவர் போலீசார் கண் முன்பாகவே அடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் குக்கி இன மக்களுக்கும் மெய்தி இன மக்களுக்கும் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது. 60 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த மோதலில் 142 பேர் உயிரிழந்தனர்.1000த்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 60,000த்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்

2.5 மாதங்களுக்கு மேலாக வன்முறை தீ அணியாமல் எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூரில் மறைக்கப்பட்ட மனித தன்மைற்ற கொடுமைகள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வன்முறை கும்பல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் 45 வயது பெண்ணை தீயிட்டு கொளுத்தியதும் வெளியாகி பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் churachandpur மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் மே 4ம் தேதி வன்முறை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

churachandpur கல்லூரியில் பி.ஏ.புவியியல் படித்து வரும் Hanglalmuan Vaiphei என்ற 21 வயது இளைஞர், குக்கி இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மெய்தி இன அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முதலமைச்சர் பிரென் சிங் பற்றியும் விமர்சித்து எழுதப்பட்ட பதிவை தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவரை கைது செய்து மே 4ம் தேதி நீதிபதி முன் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்ற போது சுற்றி வளைத்த 800 பேர் கொண்ட கும்பல் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளது. அவர்களை எதிர்கொள்ள முடியாமல் போலீசார் தப்பிஓடிவிட்டதாகவும் அந்த வன்முறை கும்பலின் வெறி ஆட்டத்தில் இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த இளைஞரின் உடலை கூட பெற்றோர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

The post மணிப்பூர் கலவரம் …பாஜக முதல்வரின் செயலற்ற தன்மை குறித்தும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்த மாணவர் போலீஸ் கண்முன் அடித்துக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Manipur riots ,Chief of the ,Bajaka ,Imphal ,Manipur ,Ammstate ,Manipur Riot ,Chief Minister ,
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...