×

கம்பத்தில் ஐம்பெரும் விழா

 

கம்பம், ஜூலை 24: கம்பத்தில் நண்பர்கள் சமூக இலக்கிய பேரவை மற்றும் சீர் மரபினர் நலச்சங்கம் இணைந்து நடத்திய கம்பத்தின் முதல் நகரத் தலைவர் ராமசாமி தேவர் நூற்றாண்டு விழா, பேராசிரியர் புதியவனின் நூல் வெளியீட்டு விழா, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா கம்பத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பேராசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சமூக இலக்கிய பேரவை செயலாளர் சேகர் வரவேற்றார்.

கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ உரையாற்றினார். கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் நகர திமுக செயலாளர் வீரபாண்டியன், ராயப்பன்பட்டி எஸ்யுஎம் பள்ளி தாளாளர் பிரபாகர், கம்பம் ஜமாத் கமிட்டி தலைவர் ஜெயினுலாபுதீன், கம்பம் தூய ஆரோக்கியஅன்னை ஆலயம் பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ், கம்பம் ஆர்ஆர் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராஜாங்கம், தமுஎகச மாநில குழு சிவாஜி, வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் பா வெல் பாரதி, தொழிலதிபர் அன்பழகன், கவிஞர் பாரதன் உட்பட பலர் பேசினர்.தேசிய செட்டியாளர்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா நூல் வெளியிட எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற எஸ்பி ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டனர்.

The post கம்பத்தில் ஐம்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Gampam ,Friends of Gambam Literary Association ,Seer Marapinar Welfare Association ,Gambam Imperum Festival ,Dinakaran ,
× RELATED கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...