×

கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுக்கி 7 வயது சிறுமி பலி விளையாடியபோது சோகம் கண்ணமங்கலம் அருகே

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுக்கி 7 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு(32), வேன் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி(29). மகள் ரூபினா(7), மகன் தர்ஷன்(5). இவர்களில் ரூபினா அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வார விடுமுறை என்பதால் நேற்று சிறுமி, தனது தம்பியுடன் வீட்டில் கட்டியிருந்த ஊஞ்சலில் விளையாடினாள்.

அப்போது சிறுமியின் கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுக்கியது. இதில் ரூபினா அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அவரது தம்பியின் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே நின்றிருந்த பெற்றோர் உள்ளே வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் சிறுமி ரூபினா இறந்தது தெரிந்து கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின்பேரில் கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஊஞ்சல் கயிறு இறுக்கி 7 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுக்கி 7 வயது சிறுமி பலி விளையாடியபோது சோகம் கண்ணமங்கலம் அருகே appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,KANMANGALE ,Kanamangalam ,Thiruvandamalai District ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி