×

பாபநாசத்தில் காளி திருநடன திருவிழா

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாபநாசம் செல்வமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடன திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கஞ்சிமேடு தெருவில் செல்வமகா காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் காளி திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 17ம்தேதி கொடியேற்றத்துடன் காளியம்மன் திருநடன திருவிழா தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காளியம்மன் வீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான காளியாட்டம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அப்போது வீதிகளில் நடனம் ஆடி வந்த காளியம்மனை அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் அமர வைத்து பழங்கள், இளநீர், மாவிளக்கு வைத்து தீபாராதனையை காண்பித்து வழிபட்டனர். இதில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பாபநாசத்தில் காளி திருநடன திருவிழா appeared first on Dinakaran.

Tags : Kali dance festival ,Papanasam ,Kumbakonam ,Papanasam Selvamaka Kaliamman ,Babanasa ,
× RELATED இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர...