×

நல்லூர் அணைக்கட்டிலிருந்து வரும் சுவேதா நதி குறுக்கே நீர்க்குமிழி மறுகட்டுமான பணிகளை பருவமழைக்கு முன் முடிக்க வேண்டும்

பெரம்பலூர்: சேலம் மாவட்டம், கொல்லி மலையில் அடிவாரப் பகுதியில் இருந்து உற்பத்தி ஆகி வரும் சுவேதா நதி, பெரம்ப லூர் மாவட்டத்தின் வழியாக பாய்ந்துசென்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்காவில் உள்ள நூத்தப்பூர், நெற்குணம், பாண்டகப்பாடி ஏரிகளை நிரப்பி கல்லாற்றில் கலக்கிறது. இந்த சுவேதா நதியின் குறுக்கே சேலம் மாவட்டம், வீரகனூர் தாலுகா, நல்லூர் என்ற பகுதியில், பெரம்பலூர் மாவட்ட நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு கடந்த ஆண்டு ரூ.1.8 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாய்ந்து வரும் சுவேதா நதி பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பந்தட்டை தாலுகாவிலுள்ள நூத்தப்பூர் ஏரிக்கும், நெற்குணம் ஏரிக்கும் தனித்தனி யாக பிரிந்து செல்கிறது. இதில் நூத்தப்பூர் ஏரியை நிரப்பும் சுவேதா நதியின் தண்ணீர் பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தின் பச்சை மலையிலிருந்து உற்பத்தி யாகிச் செல்லும் கல்லாற்றில் கலக்கிறது.

அதேபோல் நெற்குணம் ஏரியை நிரப்பிய பிறகு வழிந்தோடும் சுவேதா நதியின் நீர் பாண்டகப்பாடி ஏரி யை நிரப்பி வழிந்து, மீண்டும் அதே கல்லாற்றில் சேர்கிறது. இந்நிலையில் நல்லூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து தொடர் ச்சியாக 8 இடங்களில் குறுக்கே செல்லும் ஓடைகளால் சுவேதா நதியின் நீர் சேதாரமாகாமல் இருக்க சைபன் எனப்படும் நீர்க்குமிழி மறுக்கட்டுமானப் பணிகளும், நல்லூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு சுவேதா நதி தூர்வாரப்படும் பணிகளும், நூத்தப்பூர் நெற்குணம் ஏரிகளுக்கான கரைகளை பலப்படுத்தும் பணிகளும், பெரம்பலூர் மாவட்ட நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3.4 கோடி மதிப்பில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் இப்பணிகளை மேற்கொள் ளாமல் விட்டுவிட்டதால் நீர் வழித் தடங்கள் தூர்ந்து, சிதிலமடைந்துபோய் நீர் வரத்து பெருமளவு குறைந் துவிட்டது.

தற்போது நடந்துவரும் இந் தப் பணிகளை நேற்று பெர ம்பலூர்- அரியலூர் மாவ ட்டங்களுக்கான நீர்வள ஆதாரத் துறையின் செயற் பொறியாளர் வேல்முருகன் நேரில்ஆய்வுசெய்தார். அப் போது சைபன் நீர்க்குமிழி மறுக்கட்டுமான பணிகள் தரமாக அமைக்கப்படவே ண்டும். இரு வேறு நீர் வழி த்தடங்கள் இணையும் பகு திகளில் இனிவரும் காலங் களில் மண்அரிப்பு ஏற்பட்டு சிதிலமடையாமல், தண் ணீர் வழித்தடங்கள் மாறி விரயமாகாமல் இருக்க கவ னமாக பணிகளை மேற் கொள்ளவேண்டும்.நெற்கு ணம், நூத்தப்பூர் ஏரி கரை களை பருவ மழை அதிக மாகப் பெய்வதற்கு முன் பாக சீரமைத்து தண்ணீரை சேமிக்க ஏதுவாக குறிப் பிட்ட காலத்திற்குள் கரை களை பலப்படுத்தி முடிக்க வேண்டும். தூர்வாரும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவு றுத்தினார். இந்த ஆய்வின் போது நீர் வள ஆதாரத் துறையின் பெரம்பலூர் மாவட்ட உதவி செயற்பொறியாளர் சரவ ணன், உதவி பொறியாளர் தியாகராஜன் மற்றும் அலு வலர்கள், அந்தந்தப்பகுதி விவசாயிகள் உடன் இருந் தனர்.

The post நல்லூர் அணைக்கட்டிலிருந்து வரும் சுவேதா நதி குறுக்கே நீர்க்குமிழி மறுகட்டுமான பணிகளை பருவமழைக்கு முன் முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Suveda river ,Nallur dam ,Perambalur ,Salem district ,Kolli hill ,Peramba ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...