×

ஏர்வாடியில் ரூ.5லட்சம் வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல் கணவர், மாமியார் உள்பட 6 பேர் மீது வழக்கு

ஏர்வாடி: ஏர்வாடி லெப்பைவளைவு, உப்பு வடக்குத்தெருவை சேர்ந்தவர் மீரான் சாகிப் (36). இவருக்கும் நஸ்ரின்பானு (36) என்பவருக்கும் கடந்த 10.12.2020ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நஸ்ரின்பானுவின் பெற்றோர் 7 பவுன் தங்கநகைகளும், ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கினர். இதுபோல மீரான் சாகிப், நஸ்ரின்பானுவிற்கு 10 பவுன் தங்கநகைகள் அணிவித்தார். அதன்பின் நஸ்ரின்பானுவின் 7 பவுன் தங்க நகைகளையும், மீரான் சாகிப் அணிவித்த 10 பவுன் தங்க நகைகளையும், மீரான் சாகிப் தொழில் தொடங்குவதற்கு வேண்டும் என்று கூறி நஸ்ரின்பானுவிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 1.2.2023ம் நஸ்ரின் பானு வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மீரான் சாகிப் உறவினரான ஏர்வாடி புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்த சலாவுதீன் மனைவி பல்கிஸ்பானு (45), அதே பகுதியை சேர்ந்த சலாவுதீன் (45), மற்றொரு மீரான் சாகிப், ஆரிப் மனைவி பாத்திமா ஆகியோர் கூடுதல் வரதட்சணையாக ரூ.5 லட்சம் பெற்றோர்களிடம் வாங்கி வருமாறு நஸ்ரின் பானுவிடம் கூறினர். இதற்கு நஸ்ரின்பானுவின் கணவர் மீரான் சாகிப், மாமியார் சஹர்பானு ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். மேலும் நஸ்ரின்பானுவை தாக்கி அவரை வீட்டை விட்டு விரட்டியதாகவும் தெரிகிறது. இதுபற்றி நஸ்ரின் பானு நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாதிஸ்திரேட்டு சிதம்பரம் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து நாங்குநேரி மகளிர் போலீசார் நஸ்ரின் பானுவின் கணவர் மீரான் சாகிப், மாமியார் சஹர்பானு உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏர்வாடியில் ரூ.5லட்சம் வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல் கணவர், மாமியார் உள்பட 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Airwadi ,Meeran Saqib ,Ulu North Street, Airwadi Leppaivalvu ,Nasrinbanu ,
× RELATED ஏர்வாடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்