×

எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூலை 24: ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் அக்கீம் தலைமை தாங்கினார். இதில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தும் ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு முகமையை (என்ஐஏ) கண்டித்தும், பாஜ அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI Demonstration ,Erode ,STBI ,PP Agraharam ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...