×

பாஜவினர் செய்து வரும் கட்டப்பஞ்சாயத்து குறித்து அண்ணாமலை நடைபயணத்தில் புகார் பெட்டி மூலம் மக்கள் தெரிவிப்பர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: அண்ணாமலையின் நடைபயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டியில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாஜவினர் செய்து வரும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிதனத்தை புகார் பெட்டி மூலம் மக்கள் தெரிவிப்பார்கள் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் அயனாவரத்தில் 160 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் நேற்று வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பட்டியலை பார்த்தால் இந்தாண்டு மட்டும் பாஜவினரே அதிகமாக இருப்பார்கள். தினமும் அவதூறுகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது, மதவாதத்தை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க முதலமைச்சர் கைது நடவடிக்கை, குற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திமுகவினர் மீதும் கூட கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூறு அண்ணாமலை வந்தாலும் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜ சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதால் அண்ணாமலையின் நடைபயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டியில், பாஜவினர் ஒவ்வொரு மாவட்டங்களில் செய்து வரும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிதனத்தை மக்கள் தெரிவிப்பார்கள்.

பருவ மழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பணிகள் முடிக்கப்படாத இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டுகளில் மழைநீர் தேங்கிய இடங்களை விட இந்தாண்டு 60% வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் தயாராக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயில் நிலங்கள் ரூ. 4784 கோடி மதிப்பில், 5,021 ஏக்கர் நிலம் ஆக்கரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி கோயில் கோசாலை இடம் சிப்காட் நிறுவனத்திற்கு வழங்குவதாக தகவல் பரவி வருகிறது. கோயில் இடத்தை சிப்காட் நிறுவனம் கேட்டது. ஆனால், இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் அறநிலையத்துறை சிப்காட் நிறுவனத்திற்கு அதனை வழங்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாஜவினர் செய்து வரும் கட்டப்பஞ்சாயத்து குறித்து அண்ணாமலை நடைபயணத்தில் புகார் பெட்டி மூலம் மக்கள் தெரிவிப்பர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,Anamalai ,Bajaviner ,Chennai ,Annamalayas ,Anamalayan ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...