×

கேதார்நாத் கோயிலில் தடையை மீறி புகைப்படம் எடுத்த பக்தர்

ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் தடையை மீறி புகைப்படம் எடுத்த நபர் கோயிலுக்கு அபராதம் கட்டினார். உத்தரகாண்ட் மாநிலம் மந்தாகினி ஆற்றங்கரையில் கேதார்நாத் கோயில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரீல்ஸ் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது அண்மைக்காலமாக அதிகரித்து வந்தது. அண்மையில் பெண் ஒருவர் கேதார்நாத் கோயில் வளாகத்தில் மண்டியிட்டு தன் காதலை வௌிப்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையையும், கண்டனத்தையும் எழுப்பியது. இதனால், கேதார்நாத் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் புகைப்படம், விடியோ எடுக்க அண்மையில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்தியபிரதேசம் இந்தூரில் இருந்து கேதார்நாத் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் ஆன்மீக தலைவர் மொராரி பாபுவின் படத்தை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி மீண்டும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மொராரி பாபுவின் படத்தை புகைப்படம் எடுத்த நபரை கண்டுபிடித்தனர். அவர் உற்சாக மிகுதியில் புகைப்படம் எடுத்ததாக கோயில் நிர்வாக குழுவிடம் தெரிவித்துள்ளார். தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொண்ட அவர், கோயிலுக்கு அபராதமாக ரூ.11,000 நன்கொடை வழங்கினார்.

The post கேதார்நாத் கோயிலில் தடையை மீறி புகைப்படம் எடுத்த பக்தர் appeared first on Dinakaran.

Tags : Kedarnath Temple ,Rudraprayak ,Uttarakhand ,Utterkhand ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்