×

களம் அழைக்கிறது! வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர்! திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, திருச்சியில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் ஜூலை 26-இல் நடைபெறுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது;
* நாடாளுமன்றத் தேர்தல் களம் காண, மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மண்டல வாரியாகச் சந்திக்கத் திட்டம்.
* முதல்கட்டமாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
* இதில் டெல்டா மாவட்டங்களின் 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
* கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இப்பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
* இக்கூட்டத்தில் பெறும் பயிற்சியைக் கொண்டு கழகத்தின் வெற்றிக்கு கண்துஞ்சாமல் கடமையாற்றிட வேண்டும்.
* ‘இந்தியா’வின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பி, நெருக்கடிகளை உருவாக்கிட தொடர்ச்சியான செயல் திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்.
* எத்தகைய சவால்களையும் வென்று சாதனை படைத்திடும் ஆற்றல் கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு.
* ‘உரலுக்குள் நெல்மணிகள் உலக்கைப்பட்டு உமி வேறாய், அரிசி வேறாய் பிரிவது போல்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சங்கத்தமிழ் நூலில் கூறியுள்ளார்.
* அதேபோல, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம்.
* டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன். என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

The post களம் அழைக்கிறது! வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர்! திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Djagar Volunteers ,Chennai ,Delta ,Trichy ,Dinakaran ,
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு