×

தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டு தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைய வாய்ப்புள்ளது. பிற மவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், இன்று முதல் 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Southern, Delta ,Chennai ,Tamil Nadu ,Nilgiri ,Kowai ,Dindigul ,Theni ,Virudhunagar ,South, Delta ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...