×

கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைவு : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கிய இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். ஊட்டியிலும் கல்லட்டி நீர்வீழ்ச்சி, காட்டேரி நீர்வீழ்ச்சி மற்றும் மாயார் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிப்பது வழக்கம். ஆனால், இம்முறை இதுவரை தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாமல் உள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணை, ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் குறைந்தே காணப்படுகிறது.

அதேபோல் நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து காணப்படுகிறது. பொதுவாக ஜூன் மாதங்களில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கர்நாடக மாநிலம் மற்றும் முதுமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசிப்பது வழக்கம். தொலைவில் இருந்து புகைப்படங்களை எடுத்தும் மகிழ்வார்கள். ஆனால், இம்முறை இதுவரை பருவமழை தீவிரம் அடையாத நிலையில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழி தடங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைவு : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kallati Falls ,Ooty ,Kallati ,Dinakaran ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...