×

அண்ணனை தாக்கி நாடகமாடியவர் கைது

ஏற்காடு, ஜூலை 23: ஏற்காடு கொம்மக்காடு பகுதியை சேர்ந்தவர் வினோத் (26), கூலி தொழிலாளி. இவரது தம்பி விவேக். இவரது மனைவி வெண்ணிலா. இந்நிலையில் வினோத், புத்தூர் கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன், இரவு டூவீலரில் சென்றார். அப்போது காட்டெருது முட்டியதில் தலையில் காயமடைந்து பலத்த காயமடைந்ததாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விவேக் மனைவி வெண்ணிலாவிற்கும், வினோத்திற்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு முன்னரே, வினோத் வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில் வெண்ணிலா, வினோத்தின் தம்பி விவேக்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் வெண்ணிலா, விவேக்குடனான தகாத உறவை கைவிடவில்லை. தனது மனைவியுடனான தொடர்பை கைவிட கூறி, பலமுறை விவேக் கேட்டும், வினோத் கேட்கவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன், வினோத் எஸ்.புத்தூர் செல்லும் வழியில் சென்ற போது, விவேக் அவரை கல்லால் தாக்கினார். இதயைடுத்து நேற்று, போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, விவேக்கை கைது செய்தனர். வினோத்திற்கு கோமா நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post அண்ணனை தாக்கி நாடகமாடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Vinod ,Kommakad ,Vivek ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்