×

சேலம் பெண்கள் சிறையில் அரட்டையடித்த வார்டன்கள்: டிஐஜி மெமோ

சேலம் சேலம் பெண்கள் சிறையில், லஞ்சம் வாங்கிய வழக்கில் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு செல்போன் பேச கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் போன் கொடுத்த விவகாரத்தில் உண்மை இருப்பதாகவும் இதனை நேரில் பார்த்தவர்களே புகார் மனுவாக எழுதி அனுப்பி இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்றுமுன்தினம் கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் திடீரென பெண்கள் சிறைக்கு சென்றார்.

அப்போது, அவர் சிறை முன்பு நீண்ட நேரமாக காரில் காத்திருந்தும் கேட்டை யாரும் திறக்கவில்லை. அங்கு பாதுகாப்புக்கு இருந்த பெண் வார்டனும் அங்கில்லை. பின்னர் அவருடன் சென்ற போலீசார் காரில் இருந்து இறங்கி கேட்டை திறந்துவிட்டனர். உள்ளே சென்றபோது, அங்கு வார்டன்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில் பணியாற்றாமல் ஒன்றாக அமர்ந்து அரட்டையடித்தது தெரிந்தது. இதையடுத்து கேட்டில் இல்லாதவர், அரட்டையடித்தவர்களுக்கு மெமோ கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

The post சேலம் பெண்கள் சிறையில் அரட்டையடித்த வார்டன்கள்: டிஐஜி மெமோ appeared first on Dinakaran.

Tags : Wardens ,Salem Women's Jail ,DIG ,Salem Salem Women's Jail ,Dinakaran ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...