×

21ம்தேதி காலை பக்தர்கள் முளைப்பாரிஅரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச மையங்கள் கலந்தாய்வு கூட்டம்

அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில சமரச மையம் மற்றும் அரியலூர் மாவட்ட சமரச மையம் இணைந்து முத்தரப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் இளந்திரையன் வழிகாட்டுதலின் பேரில் அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி . கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் மூத்த பயிற்றுநருமான உமா இராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமரச மையத்தின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். விழாவில் குடும்ப நல நீதிபதி செல்வம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சரவணன், சார்பு நீதிபதிகள் ரெய்க்கானா பர்வீன், லதா, நீதித்துறை நடுவர்கள் அறிவு, செந்தில்குமார், கற்பகவள்ளி, ஆக்னேஷ் ஜெப கிருபா, உரிமையியல் நீதிபதிகள் செந்தில்குமார், கணேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி அழகேசன் வரவேற்புரை ஆற்றினார்.

அரசு வழக்கறிஞர்கள் கதிரவன், சின்னத்தம்பி, முன்னிலை வகித்தனர். அரியலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் . செல்வராஜ், ஜெயங்கொண்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்புமணி, அட்வகேட் அசோசியேசன் தலைவர் சுரேஷ்குமார், நியூ பார் அசோசியேஷன் தலைவர் வேல்முருகன், செந்தில்,செந்துறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சின்னதுரை மற்றும் சங்க செயலாளர்கள் முத்துக்குமரன், செந்தில் குமார், பாஸ்கரன், ராஜ்குமார், ஸ்டாலின், .பாலு மூத்த வழக்கறிஞர்கள் . மணி, .சிவம் .ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி, பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரியலூர் மாவட்ட சமரச மைய வழக்கறிஞர்கள் . மோகன், செந்தில் குமார், ராபர்ட் கென்னடி, ராஜேந்திரன், இளவரசன், கதிரவன், பெண் வழக்கறிஞர்கள் அல்லி, அன்னம்மாள், தனலட்சுமி,எஸ் சாந்தி, காந்திமதி, லாவண்யா,. கோமதி, வண்ணமயில் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 21ம்தேதி காலை பக்தர்கள் முளைப்பாரிஅரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச மையங்கள் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : District Integrated Court of Mulaiparri ,Ariyalur ,Tamil Nadu State Conciliation Center ,Ariyalur District Conciliation ,Ariyalur District Unified Court ,
× RELATED மக்காச்சோள பயிரில் உருவாகும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்