×

7 ஐம்பொன் சிலைகள், உண்டியலில் பணம் திருட்டு போலீஸ் விசாரணை ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, ஜூலை 23: ஆரணி அருகே 7 ஐம்பொன் சிலைகள் மற்றும் உண்டியலில் பணம் திருட்டுபோனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட பூண்டி கிராமத்தில் ஜெயினர் கோயில் உள்ளது. இந்நிலையில், கோயில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் கோயிலில் பூஜை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். இதைதொடர்ந்து, நேற்றுகாலை வழக்கம்போல் இரவு காவலர் சவுந்தர் கோயிலில் உள்ள ராஜகோபுர திறந்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது, கோயிலில் உள்ள கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, கோயில் நிர்வாகிகளுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளே சென்று பார்த்த போது, கோயில் முழுவதும் மிளகாய்பொடிகளை தூவிவிட்டு, கோயிலில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஜம்பொன் சிலைகளான 1.5 அடி உயரமுள்ள அனந்ததீர்தங்கரர். 1 அடி உயரமுள்ள பார்சுவநாதர், அரை அடி உயரமுள்ள பார்சுவநாதர், பத்மாவதி, சக்ரரேஸ்வரி, ஜோலாமாலினி, சிலைகள், முக்கால் அடிஉயரமுள்ள தரனேந்திரன், சிலை உள்ளிட்ட 7 ஐம்பொன் சிலைகள், கோயில் உண்டியல் உடைத்து பணத்தையும் மர்மநபர்கள் திருடிச்னெ்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்ஐ ஷாபுதீன் மற்றும் போலீசார் கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருவண்ணாமலையில் இருந்து தடயவியல் நிபுணரை வரவைத்து திருட்டு குறித்து தடயங்கள் சேகரித்தனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post 7 ஐம்பொன் சிலைகள், உண்டியலில் பணம் திருட்டு போலீஸ் விசாரணை ஆரணி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Aimbon ,Arani ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு