×

அமெரிக்காவில் மெஸ்ஸி மேஜிக்

அமெரிக்காவின் போர்ட் லாடர்டேல் நகரில் நடந்த லீக்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் இன்டர் மயாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை சேர்ந்த க்ரூஸ் அஸுல் அணியை வீழ்த்தியது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில் இன்டர் மயாமி கேப்டன் லியோனல் மெஸ்ஸி அபாரமாக கோல் அடித்து வெற்றியை வசப்படுத்தினார். இன்டர் மயாமி அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே மெஸ்ஸி கோல் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

The post அமெரிக்காவில் மெஸ்ஸி மேஜிக் appeared first on Dinakaran.

Tags : Messi Magic ,America ,Inter Miami ,Leagues Cup football ,Port Lauderdale, America ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...