×

சீனா, துபாயில் இருந்து தீவிரவாதிகளுக்கு ரூ712 கோடி சப்ளை: 9 பேர் கைது

திருமலை: வாட்ஸ் ஆப், டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என சமீபத்தில் சைபர் மோசடி அதிகரித்து வருகிறது. எல்லோரையும் நம்ப வைக்க சிறிய தொகை ஆரம்பத்தில் அனுப்பி வைத்து நம்பிக்கையை பெறுகின்றனர். அதன் பின்னர் வரிப் பிரச்னை வராமல் இருக்க வேண்டும் எனக்கூறி ஒரு டம்மி வங்கி கணக்கை திறக்க வேண்டும் என கூறுகின்றனர். அந்த டம்மி வங்கி கணக்கில் வேலைக்கான பணம் டெபாசிட் செய்வதாக சொல்கிறார்கள். அதில் டெபாசிட் செய்யும் தொகையை எடுக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

பின்னர் பணத்தை மோசடி செய்துவிடுகின்றனர். இவ்வாறு ஐடி ஊழியர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் நாடு முழுவதும் ஏஜென்டுகளை நியமித்து 15 ஆயிரம் பேரிடம் சைபர் மோசடியில் ஈடுபட்ட கும்பல் சீனா, துபாயில் இருந்து ரூ712 கோடியை தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் மோசடி கும்பலின் ஏஜென்டுகளாக செயல்பட்ட ஐதராபாத், மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களை சேர்ந்த பிரகாஷ் முல்சந்த்பாய் பிரஜாபதி, குமார் பிரஜாபதி, நைமுதீன் வஹிதுதீன்ஷேக், ககன்குமார் சோனி,

பர்வீஸ் என்ற குட்டு, ஷாமர்கான், முகமது முன்னாவர், ஷா ஷமீர், அருள் தாசின் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வரும் பணம் கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு சீனா, துபாயில் உள்ள கும்பல்களுக்கு செல்கிறது. இதுவரை நடந்த விசாரணையில் நாடு முழுவதும் 15 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த பணத்தில் ரூ584 கோடி 48 வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மற்ற கணக்குகளில் ரூ128 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை நடக்கிறது.

The post சீனா, துபாயில் இருந்து தீவிரவாதிகளுக்கு ரூ712 கோடி சப்ளை: 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : China, Dubai ,Thirumalai ,China, ,Dubai ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு