×

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ58கோடி இழந்த தொழிலதிபர்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஆன்லைன் மூலமாக சூதாடுவதற்காக ஆனந்த் எனப்படு்ம் நவ்ரதன் ஜெயின் என்பவர் வலியுறுத்தி உள்ளார். ஆன்லைன் சூதாட்ட கணக்கிற்கு செல்வதற்காக வாட்ஸ்ஆப்பில் ஆனந்த் லிங்க் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சூதாட தொடங்கினார். இதில் அவர் ரூ.5கோடியை அவர் பெற்ற நிலையில் ரூ.58கோடியை இழந்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் ஆனந்திடம் தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்த நிலையில் சைபர் பிரிவில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் கோண்டியா நகரில் உள்ள ஆனந்த் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.14கோடி ரொக்கம் மற்றும் 4கிலோ தங்க பிஸ்கட்டுக்கள் பறிமுதல் செய்துள்ளது. எனினும் ஆனந்த் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

The post ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ58கோடி இழந்த தொழிலதிபர் appeared first on Dinakaran.

Tags : Nagpur ,Nagpur, Maharashtra State ,Anand Nappadm Navrathan Jain ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...