×

கோவை சூலூர் அடுத்த ரங்கநாதபுரத்தில் நாயை கட்டையால் அடித்துக் கொன்றவர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ரங்கநாதபுரத்தில் நாயை கட்டையால் அடித்துக் கொன்ற விபீஷணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் கிருஷ்ணகுமாரியின் சகோதரரான விபீஷணன் என்பவர் தங்கி உள்ளார். இந்த நிலையில் இவர்களது வீட்டில் வளர்ந்து வந்த லேபர் வகை நாய், கிருஷ்ணகுமாரியின் மகனை கடித்துள்ளது.

இதனால் விபீஷணன் வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாயை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கட்டி உள்ளார். அப்போது அந்த நாய் அவரையும் கடித்ததாக அவர் கூறினார். ஆத்திரமடைந்த விபீஷணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்கியுள்ளார். அவர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நாய் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளது.

மேலும் அந்த நாய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நாய் கொல்லப்பட்டதை உறுதி செய்து விட்டு சூலூர் காவல் நிலையத்தில் விபீஷணன் மீது புகார் அளித்து உள்ளார். தற்போது அந்த புகாரின் பேரில் நாயைக் கொன்ற விபீஷனனை கைது செய்த சூலூர் போலீசார் காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர்.

The post கோவை சூலூர் அடுத்த ரங்கநாதபுரத்தில் நாயை கட்டையால் அடித்துக் கொன்றவர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Govi Sulur ,Ranganathapura ,Govai ,Vibishanan ,Soulur, Govai district ,Gov ,Soulur ,Dinakaran ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின்...