×

ஜி20 மாநாட்டு நிகழ்வுகள்: சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை முதல் 26ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: ஜி-20 மாநாட்டு நிகழ்வுகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அந்த பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் இந்தாண்டு தலைவராக இந்தியா உள்ளது. இந்த கூட்டமைப்பு மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வளர்ச்சி, ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.

இதற்கான ஜி20 உச்சி மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜி-20 மாநாட்டு நிகழ்வுகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஜி-20 மாநாட்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதை ஒட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஜி-20 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜூன் 23 முதல் 26 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஜி20 மாநாட்டு நிகழ்வுகள்: சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை முதல் 26ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Tags : G20 Conference Events ,Chennai ,G-20 conference ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...