×

வீட்டில் 5 அடி பள்ளம் தோண்டி இரவு பூஜை புதையல் எடுப்பதாக கூறி போலி வைர கற்கள் கொடுத்து மோசடி

*2 பேர் அதிரடி கைது

திருமலை : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் மண்டலம் கந்தாவூர், இந்திரம்மா காலனியை சேர்ந்த சையத் பாஷாவின் மகளுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் சையது பாஷா மற்றும் அவரது மனைவி இருவரும், மகளை அழைத்துக்கொண்டு கடந்த 1ம் தேதி புங்கனூர் மண்டலம் இடிகப்பள்ளியில் உள்ள தர்காவிற்கு சென்றனர். அங்கு அவரது மனைவியின் தூரத்து உறவினரான மதனப்பள்ளியைச் சேர்ந்த ஆஜிஜ் அலி என்பவர் இருந்ததால், அவரிடன் மகளின் உடல்நிலை சரியில்லை என தெரிவித்தார். இதனையடுத்து அஜிஜ் அலி வீட்டிற்கு வந்து பார்பதாக கூறினார்.

இதனையடுத்து ஆஜிஜ் மற்றும் அவரது நண்பர் ஜி.ரெட்டி நரசிம்மலு இருவரும் ஒரு வாரத்திற்கு முன்பு சையத் பாஷா வீட்டிற்கு சென்றனர். அப்போது சிறிது நேரம் கண்களை மூடி கொண்டு மந்திரம் உச்சரித்து உங்க வீட்டில் புதையல் இருப்பதாகவும் அந்த புதையலை எடுத்தால் மகள் ஆரோக்கியம் நலமாகும் என தெரிவித்து அந்த புதையலை எடுக்க முன்பணமாக ₹20 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அதே இரவில் வீட்டின் படுக்கையறையில் எஸ்.அஜீஜ் அலி மற்றும் அவரது நண்பர் ஜி.ரெட்டி நரசிம்மலு இருவரும் சுமார் 5 அடி ஆழத்தில் குழி தோண்டினர். பின்னர் நல்ல நாளில் பூஜை செய்து மறைந்துள்ள புதையலை எடுப்பதாக கூறிவிட்டு மீண்டும் கடந்த 18ம் தேதி அன்று இரவு சென்று வீட்டில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பூஜை செய்தனர். அப்போது பள்ளத்தில் இருந்து கிடைத்ததாக இரண்டு போலி வைர கற்களை. சையத் பாஷாவிடம் கொடுத்தனர்.

மேலும் குழிக்குள் இன்னும் சில வைரங்கள் இருப்பதாக கூறி அவர்கள் கொடுத்த வைர கற்களை மோதிரம் செய்து, கைகளில் போட்டு கொள்ளும்படி தெரிவித்தனர். அதற்குs; சையத் பாஷா வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் பார்த்ததால் அங்கிருந்து 2 பேரும் தப்பி சென்றனர். இதனையடுத்து சையத் பாஷா விசாரித்ததில் அது போலி வைரம் என தெரிந்து பலமனேர் போலீசில் நடந்த விவரங்களை கூறி புகார் அளித்தார்.

இந்நிலையில் அஜிஜ் அலி மற்றும் அவரது நண்பர் கே.ரெட்டி நரசிம்மலு இருவரும் சையத் பாஷாவின் வீட்டிற்குச் சென்று, அவர்களிடம் மீண்டும் கொஞ்சம் பணம் கேட்கும் நோக்கத்தில் கந்தாவூருக்கு சென்றனர். அப்போது பாலத்தின் கீழ் அவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்த ஷேக் அஜீஜ்(29), குரபாலகோட்டா கிராமத்தை சேர்ந்த கோபிஷெட்டி நரசிம்முலு(38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் 5 அடி பள்ளம் தோண்டி இரவு பூஜை புதையல் எடுப்பதாக கூறி போலி வைர கற்கள் கொடுத்து மோசடி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Andhra State Chittoor District ,Palamaner Mandal Kandavur ,Indramma Colony ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி