×

எஸ்எஸ்சி ஹவல்தார் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: எஸ்எஸ்சி ஹவல்தார் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளின் கீழ் உள்ள காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணி நியமனம் செய்து வருகிறது. அந்த வகையில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் அவல்தார் தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் ஒரு வார காலமாக இணையதளம் சரிவர இயங்காததால் பலர் தேர்வுக்காக விண்ணப்பிக்க இயலவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது; ஸ்டாப் செலக்சன் கமிஷன் MTS (Non technical) ஹவல்தார் (CBIC & CBN) தேர்வுகளுக்கான கடைசி தேதி நேற்று முடிவடைந்துள்ளது. ஆனால் ஒரு வாரமாக இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே விண்ணப்ப தேதியை நீட்டிக்குமாறு கோரியுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

The post எஸ்எஸ்சி ஹவல்தார் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : SSC Havaldar ,Su Venkatesan ,CHENNAI ,Su. Venkatesan ,SSC ,Union Govt ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரைக்கான 20...