×

195 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

பென்னாகரம், ஜூலை 22:ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் ஒகேனக்கல்லில் கிடைக்கும் மீன் உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கெட்டுப்போன அழுகிய மீன்களை, அதிக மசாலா சேர்த்து பொரித்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த மாதம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திலுள்ள மீன் கடைகளில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அழித்தனர்.

பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி, ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து, 30க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், 5 கடைகளில் அழுகிய நிலையில் இருந்த 195 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மீன்களை அருகில் உள்ள வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர், வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். மீண்டும் இதுபோல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த சோதனையால் ஒகேனக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

The post 195 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pennagaram ,Ogenakal ,Ogenacal ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...