×

படைபத்து மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

 

அரியலூர், ஜூலை 22: அரியலூர் மேலத்தெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியையொட்டி பால்குட திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம், அக்னி சட்டி எடுத்த வந்த பக்தர்கள், முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post படைபத்து மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா appeared first on Dinakaran.

Tags : Balkuta Festival ,Padapattu Mariamman Temple ,Ariyalur ,Ariyalur Meleteru ,Padapattu Mariamman temple festival ,
× RELATED திருநாகேஸ்வரம் கவுமாரியம்மன் கோயில்: 58ம் ஆண்டு பால்குட பெருவிழா