×

29 வது சதம் விளாசினார் கோஹ்லி: பிராட்மேன் சாதனை சமன்

இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி (34 வயது), வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நேற்று தனது 29வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார். தனது 500வது சர்வேதச போட்டியில் விளையாடும் அவர் இந்த சதத்தின் மூலமாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை (29 சதம்) சமன் செய்ததுடன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனையும் (28 சதம்) முந்தினார். இந்த வரிசையில் கோஹ்லி 17வது இடத்தில் உள்ளார். சச்சின் (51 சதம்), காலிஸ் (45), பான்டிங் (41), சங்கக்கரா (38), டிராவிட் (36) ஆகியோர் முதல் 5 இடத்தில் உள்ளனர்.

The post 29 வது சதம் விளாசினார் கோஹ்லி: பிராட்மேன் சாதனை சமன் appeared first on Dinakaran.

Tags : Kohli ,Bradman ,Wirat Kohli ,West Indies ,Port of Spain ,Dinakaran ,
× RELATED கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்...