×

‘குற்றாலம் கூட்டிட்டு போங்க…’ அதிமுக பெண் கவுன்சிலர் அடம்: சிவகாசி யூனியன் கூட்டத்தில் சிரிப்பலை

சிவகாசி: ‘குற்றாலம் அழைத்து செல்லுங்கள்’ என்று சிவகாசி யூனியன் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அடம் பிடித்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி யூனியன் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் மீனாட்சிசுந்தரி, ‘‘எங்கள் பகுதியில் நடைபெற்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சமூக வலைத்தளங்களில் சிலர் தவறுதலாக பதிவு செய்துள்ளனர். அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றாலத்திற்கு அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்’’ என தெரிவித்தார். இதற்கு கூட்டத்தில் சிரிப்பலை கிளம்பியது. கடந்த மாதம் சிவகாசி மாவட்ட கவுன்சிலர் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளனர். இதேபோல், அனைத்து கவுன்சிலர்களையும் குற்றாலத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அதிமுக பெண் கவுன்சிலர் கூறியதாக சக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

The post ‘குற்றாலம் கூட்டிட்டு போங்க…’ அதிமுக பெண் கவுன்சிலர் அடம்: சிவகாசி யூனியன் கூட்டத்தில் சிரிப்பலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Adam ,Sivakasi ,Sivakasi union ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை