×

வடமதுரை-ஒட்டன்சத்திரம் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மரக்கிளைகள்: அகற்ற கோரிக்கை

வடமதுரை: வடமதுரை-ஒட்டன்சத்திரம் சாலையில் தாழ்வாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும், வேன், கார் மற்றும் டூவீலர்களும் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த சாலையோரத்தில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்களின் கூரை, லாரிகளில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகள் மரக்கிளைகளில் ேமாதி சேதமடைகின்றன.

மரக்கிளைகளில் மோதுவதை தவிர்க்க, சாலையின் நடுவில் கனரக வாகனங்களை ஓட்டுனர்கள் இயக்குகின்றனர். இதனால் எதிரில் வரும் வாகனங்களுடன் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக செல்லும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்ைஎ எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post வடமதுரை-ஒட்டன்சத்திரம் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மரக்கிளைகள்: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vadamadurai-Ottanchattaram road ,Vadamadurai ,Vadamadurai-Ottenchatram road ,Dindigul District ,Dinakaran ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...