×

புளிப்பு கார வடை

தேவையானவை:

கடலைப்பருப்பு – அரை கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
உளுத்தம்பருப்பு – கால் கப்,
பச்சரிசி – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 8,
புளி – சிறிய உருண்டை,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – கால் கப்,
உப்பு – ருசிக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்துஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாகஅரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள்.எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். புளிப்பும் காரமும்சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை.

The post புளிப்பு கார வடை appeared first on Dinakaran.

Tags :
× RELATED கீரை தேங்காய்ப்பால் சூப்