×

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 24ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

சென்னை: நடைபெற்ற ஜூன் / ஜூலை 2023, பிளஸ்2 துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை, மதிப்பெண் பட்டியலாக 24.07.2023 (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள் பின்வருமாறு:
தேர்வர்கள் வருகிற 24, 07,2023 (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் தமது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற முகவரிக்குள் சென்று Result என்றவாசகத்தை “Click ” செய்தால் தோன்றும் பக்கத்தில் -HSE Second Year Supplementary Exam, Jun/Jul2023 – Result-Statement Of Marks Download- என்ற வாசகத்தினை ” Click ” செய்து தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஜூன் ஜூலை 2023, மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 27.072023 (வியாழக் கிழமை) மற்றும் 28.072023 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள்
பதிவு செய்துக்கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் (Scan Copy of the Answer Script) பெறுவதற்கான கட்டணம்:

*ஒவ்வொரு பாடத்திற்கும்: ரூ.275

மறுகூட்டல்-I (Retotalling.I) கட்டணம்:

*உயிரியல் பாடத்திற்கு மட்டும்: ரூ.305

*ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்): ரூ.205

குறிப்பு: விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல்-II / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும். மறுகூட்டல்-1 கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது.

The post பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 24ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Examinations Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…